புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர் ஒருவரை அவதூறாக பேசிய மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் லெட்சுமணதாஸ் காந்தி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சோனை கருப்பையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.