புதுக்கோட்டை,அக்.6: தமிழ்நாட்டில் ஒன்றிய மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் தமிழருக்கே வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்து தமிழருக்கே வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கையொப்பமிட்டனர்.
தமிழ்நாட்டில் ஒன்றிய மாநில அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் தமிழருக்கே வழங்க வேண்டும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்து தமிழருக்கே வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை சார்பில் புதுக்கோட்டையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டு சென்றனர்.