புதுக்கோட்டை, பிப்.17: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பினை மண்டலப் பொது மேலாளர் முகமது நாசர் தொடங்கி வைத்து வாழ்த்தினார்.புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சசிதர் கலந்து கொண்டு, பொதுத்தேர்வு எழுதுவதன் நுட்பங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர்கள் சுரேஷ் பார்த்தீபன் டிக்ரோஸ், பாலமுருகன், தொழிலாளர் நலன் உதவிப் பொது மேலாளர் செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.