புதுக்கோட்டை, செப் .8: குடும்ப அட்டை குறைதீர்முகாம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், நாளை (9ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவுமாற்றம் ஆகிய சேவைகளை பெறலாம்.
மேலும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள், இடர்பாடுகள் குறித்தும் கூறலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.