Monday, April 15, 2024
Home » புதுக்கோட்டையில் அரசு கல் குவாரிகள் ஏலம்

புதுக்கோட்டையில் அரசு கல் குவாரிகள் ஏலம்

by Ranjith

 

புதுக்கோட்டை, பிப்.16: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள 18 அரசு கல் குவாரிகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கல்குவாரிகள் இலுப்பூர், கீரனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளன. இவற்றில் 18 அரசு கல் குவாரிகளுக்கான ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட அதிகமாக ஏலம் கேட்கப்பட்ட 5 குவாரிகளுக்கு ஏல உரிமங்கள் வழங்கப்பட்டன. அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட குறைவான ஏலம் கேட்கப்பட்ட 13 குவாரிகளுக்கு ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

17 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi