புதுக்கோட்டை, ஆக.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரகப் பகுதிகளில் கடந்த 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம் 8.8.2024 அன்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்காடு பி.ஆர்.எம். திருமண மஹாலில், கணக்கன்காடு, முள்ளன்குறிச்சி, பொன்னன்விடுதி, வடதெரு, வணக்கன்காடு, களபம் ஆகிய ஊராட்சிகளுக்கும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், தொண்டைமான்நேந்தல் கிருஷ்ணா விழா அரங்கத்தில்குன்னூர், வீரமங்கலம், கீழச்சேரி, குண்டகவயல், பூவலூர்ஆகிய ஊராட்சிகளுக்கும்,
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை, கே.எஸ்.ஆர். மண்டபத்தில், செவலூர், மேலநிலை, சுந்தரம், கோவனூர், அரசமலை, செம்பூதி, தேனூர், வாழக்குறிச்சி, நல்லூர், நெரிஞ்சிக்குடி, கூடலூர், சேரனூர் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.