புதுக்கோட்டை, மே 27: நமணசமுத்திரம் பஞ்சாலை நிலத்தை மில் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. நமணசமுத்திரம் பஞ்சாலை நிலத்தை மில் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்திற்கு கட்சி தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்ட முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோ ரிக்கை மனு அளித்தனர்.