புதுக்கோட்டை, மே 28: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகப் பேசி முடிக்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு, ஏஐடியுசி, டிஎன்எஸ்டிசி தொழிற் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் தர், பொருளாளர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகப் பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை ஈடுகட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பயன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.