வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜமுனா ராணி தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அகிலன், பொருளாளர் லோகநாதன், லோகநாதன் விடுதி காப்பாளர்கள் வீரமணி, ராமாமிருதம், இளமுருகு, உமா, மகேஸ்வரி, சங்கீதா கலைவாணி, செந்தில்குமார், உள்ளிட்ட விடுதி காப்பாளர்கள் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.