அரூர், ஜூன் 20: ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கியும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மொரப்பூர் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடந்தது. பிரசாரத்தில், தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் ஈச்சம்படி அணையில் இருந்து நீரேற்றம் மூலம், மொரப்பூர் பகுதி ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம், சென்னாக்கல் அணைக்கட்டு நிட்டம் ஆசியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தர்மபுரி- மொரப்பூர் ரயில் இணைப்பு, மொரப்பூர் வழியாக அதிகாலை 3.30 மணிக்கு சென்னை செல்லும் மங்களூர் ரயிலை மீண்டும் மொரப்பூரில் நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்களை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து பிரசாரத்தில் விளக்கினர்.
பிரசாரத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் மல்லையன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாது, ராமன், ஹானஸ்ட் ராஜ், மாதேஷ், தாமரைச்செல்வன், கர்னல் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மொரப்பூர் ஒன்றியம், ஜடையம்பட்டியில் தொடங்கிய பிரசாரம், ஆர்.கோபிநாதம்பட்டி, போளையம்பள்ளி, பொம்மிட்டி, நவலை, செங்குட்டை, கே.ஈச்சம்பாடி, கம்பைநல்லூர், சாமண்டஅள்ளி பெரியார் நகர், தொட்டம்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் நடந்தது.