மேட்டுப்பாளையம், ஜூன் 13: சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு லிங்காபுரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் புதிய நியாய விலை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதி ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் நேற்று துவங்கின.
பணிகளை திமுக சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூராட்சி துணை தலைவர் செந்தில் குமார், வார்டு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, ரங்கராஜ், திமுக நிர்வாகி பிரகாஷ், இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் மணி இராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.