புதுக்கோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னை, திருப்பூர், கோயம்புத்ததூர், வேலூர், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கும். குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் வந்து செல்கின்றன.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் முத்திரி பருப்பு, பூ வியபாரம் என பல வியபாரத்தில் சிறுவியபாரிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கமங்கலம், வடகாடு பகுதிகளில் விளையக்கூடிய பலாப்பழத்தை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி பேருந்து நிலையத்தில் அடுக்கி வைத்து விடுகின்றனர்.
பின்னர் பாலப்பழத்தில் இருந்து சுலையை எடுத்து அதனை ஒரு கவரில் போட்டு ஒரு கவர் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர். சிறிய கூடைகளில் அதன் கொள்ளவுக்கு ஏற்ப அடுக்கி வைத்துகொண்டு பலா சுழை, பலா சுழை என்று வியபராத்தில் இறங்கி விடுகின்றனர். ஒரு சில பயணிகள் தங்களது வீடு மற்றும் உறவினர்களின் வீட்டிற்கும் வாங்கிச் செல்கின்றனர். போட்டிபோட்டுக்கொண்டு விற்னையில் வியபாரிகள் ஈடுபடுவதால் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.