மல்லசமுத்திரம், செப்.12: மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத -படிக்க தெரியாத நபர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 1235 பேருக்கு அடிப்படை எண் அறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கும் பொருட்டு 60 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் கற்போருக்கு பயிற்சி ஏடு, சிலேட்-பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மைய தன்னார்வலர்கள் பள்ளி வேலை நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் ஆண்டுக்கு 200 மணி நேரம் பயிற்சி அளித்து அடிப்படை எண் அறிவு எழுத்தறிவு முழுமையடைத் செய்வர். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்தல், பணப்பரிவர்த்தனை, கடிதம் எழுதுதல், பேருந்து அடையாளம் காணுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மையங்களை பார்வையிட்டு எழுத்தறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.