காவேரிப்பட்டணம், ஜூன் 6: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில், புதிய தார் சாலை அமைக்கும் பணியை, தலைவர் ஆய்வு செய்து தரமாக இருக்க கேட்டுக்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு சுபாஷ் சந்திரபோஸ் தெரு, அங்காளம்மன் கோவில் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை 15வது நிதி குழு மானியத்திலிருந்து, 2ம் தவணையாக தார் சாலை அமைக்கும் பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், செயல் அலுவலர் ராணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திமுக மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் செந்தில்குமார், ஒப்பந்ததாரர் ராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் மாலனி மாதையன், மற்றும் உறுப்பினர்கள் கீதா ஞானசேகர், அமுதா சக்திவேல், வசந்தி சின்னராஜ், தமிழ்செல்வி சோபன்பாபு, அமுதா பழனி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதிய தார் சாலை பணி ஆய்வு
0
previous post