பேரையூர், அக். 29: பேரையூர் தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த தாசில்தார் ரவிச்சந்திரன், உசிலம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த செல்லப்பாண்டி, பேரையூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பேரையூர் தாசில்தாராக பொறுப்பேற்றார். அவருக்கு வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.