பரமத்திவேலூர், செப்.6: பரமத்திவேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஜேடர்பாளையம் பிரிவு, கொத்தமங்கலம் பகுதிக்கு சீரான மின் விநியோகம் வழங்க, தமிழ்நாடு மின்வாரிய பகிர்மான கழகத்தால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை பரமத்திவேலூர் முன்னாள் எம்எல்ஏ கேஎஸ். மூர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கபிலர்மலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதிய டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு திறப்பு
previous post