வில்லிபுத்தூர், ஜூன் 20: வில்லிபுத்தூரில் புதருக்குள் மறைந்திருந்த கஞ்சா வியாபாரிகள் சிக்கினர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிபுத்தூரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்கும் வயைில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் செங்குளம் விளக்கு பகுதியில் நகர் சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் புதர் மறைவில் 4 இளைஞர்கள் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நான்கு பேரை பிடித்து நகர் காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.