ஈரோடு, நவ. 21: ஈரோடு எல்லப்பாளையத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு வடக்கு போலீஸ் எஸ்ஐ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, மளிகை கடை ஒன்றில் சோதனை நடத்தினர். இதில், கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கடையின் உரிமையாளரான ஈரோடு பெரியசேமூர் விஐபி கார்டனை சேர்ந்த பட்டுராஜன் மனைவி ஜாஸ்மின் (36) என்பவரை கைது செய்து,அவரிடம் இருந்த 21.49 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல், ஈரோடு வில்லரசம்பட்டி முத்துமாணிக்கம்நகரில் புகையில் விற்றதாக அதேபகுதியை சேர்ந்த மாது மனைவி பாக்கியம் (65), நம்பியூர் கோவை சாலை பிளியம்பாளையம் பிரிவு பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் கிருஷ்ணமூர்த்தி (25), கடத்தூர் காசியூர் அளுக்குளியில் செட்டிபாளையத்தை சோ்ந்த கணேஷ் (69) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, 700 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.