பாலக்கோடு, மே 15: தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் பாலக்கோடு போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், எஸ்ஐ கோகுல் மற்றும் குழுவினர், பாலக்கோடு நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு மைதீன் நகரில் உள்ள பெட்டிக்கடை, கடைத்தெருவில் உள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. சுமார் 1500 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 கடைகளுக்கும் சீல் வைத்து, உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்
0
previous post