ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாவட்டம் நம்பியூர் கெட்டிசெவியூரில் உள்ள டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சிறுவலூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில், கடையில் புகையிலை, குட்காவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான நம்பியூர் கெட்டிசெவியூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி கலா (49) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 340 கிராம் எடையுள்ள புகையிலை, குட்காவை பறிமுதல் செய்தனர். இதேபோல், சத்தியமங்கலம் வடக்குபே்டையில் புகையிலை விற்றதாக கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (64) என்பவரை கைது செய்து, 200 கிராம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
0