ஈரோடு, ஆக. 26: ஈரோடு மாவட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியான சத்தி ரோடு, கொங்கலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன் தினம் மளிகை கடைகள், பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, சத்திரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றின் அருகில் உள்ள பெட்டிக் கடையில் சோதனையிட்டதில், அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 1.562 கி.கி. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் கடை உரிமையாளரான ஈரோடு அடுத்துள்ள அவல்பூந்துறை, பூவாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த மணி (59) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, கொங்கலம்மன் கோயில் மேற்கு வீதியில் உள்ள ஜெனரல் ஸ்டோரில் சோதனையிட்டதில் 1.489 கி.கி புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, ஈரோடு டவுன் போலீசார், கடையின் உரிமையாளரான தாராராம் (38) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3.051 கிலோ கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.