நத்தம், பிப். 6: நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்ஐ அருள்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அண்ணா நகர் பகுதியில் நத்தத்தை சேர்ந்த அன்வர் அலி (35) என்பவர் டூவீலரில் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அன்வர் அலியை கைது செய்து அவரிடமிருந்த 15 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்றவர் கைது
0