நத்தம், ஜூன் 24: நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில், குட்டுப்பட்டி கன்னிமார்புரம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் மீனாட்சி(35) என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.