சின்னமனூர், மே 23: சின்னமனூர் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் ஓடைப்பட்டி காவல் நிலைய எஸ்ஐ பாண்டிச்செல்வி தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ப்போது, சீப்பாலக்கோட்டை அய்யன்கோயில் தெருவை சேர்ந்த செல்வவிநாயகம் (45) என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையிலிருந்த 2 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று சீப்பாலக்கோட்டை ரை ஸ்மில் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவரது பெட்டிக்கடையில் இருந்த 59 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தனித்தனியாக வழக்குப்பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
புகையிலை விற்றவர்கள் கைது
83