பவானி, மே 26: பவானி அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பவானியை அடுத்த சித்தாரில் மளிகைக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பவானி போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், ஹான்ஸ், கூலிப், விமல் பாக்குகள் என ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 பண்டல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, மளிகைக் கடை உரிமையாளரான சித்தார், கேசரிமங்கலத்தை சேர்ந்த முருகனை (52), கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.