கோவில்பட்டி, ஜூன் 17: கோவில்பட்டியில் விற்பனைக்காக மது மற்றும் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் புகையிலை மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் எஸ்ஐ பொன்ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக புகையிலை மற்றும் மதுபாட்டில்களை கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் முருகேச பாண்டியன் (60), லிங்கம்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த சந்திரனின் மகன் நீலச்சந்திரன் (51) ஆகிய இருவரும் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், இருவரிடம் இருந்து 55 புகையிலை பாக்கெட்கள், 30 மது பாட்டில்கள், ரூ.30,475 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் மது பதுக்கிய 2பேர் கைது
0