போடி, செப். 3: தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி புறநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விநாயகர் கோயில் தெருவில் பூபதி (35) என்பவர் நடத்தி வரும் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பூபதியை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.