பொன்னை, நவ.18: பொன்னை காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு செய்து புகார் அளிக்க வருபவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். பொன்னை காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களின் வருகை பதிவேடு, பரிமரிக்கப்பட்டு வரும் குற்றப்பதிவேடு ஆகியவற்றை சரிபார்த்தார். மேலும், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காட்பாடி டிஎஸ்பி பழனி, பொன்னை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் எஸ்ஐ முரளிதரன் உள்ளிட்டோரிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போது குற்றங்களை தடுப்பது குறித்தும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும், புகார்தாரர்களை அலை கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.