செய்முறைபுழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,
கொள்ளு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து 3 மணி
நேரம் ஊற வைக்கவும். இத்துடன் பெருஞ்சீரகம், சீரகம், தனியா, பெருங்காயம்,
பூண்டு, உப்பு சேர்த்து, பொடி ரவை பதத்திற்கு அரைக்கவும். பீர்க்கங்காயை
தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக
நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு
தாளிக்கவும். பின் பீர்க்கங்காய், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். வதக்கியதை,
அப்படியே அரைத்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல் சூடேறியதும் மாவை
அடை போல ஊற்றி, பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
பீர்க்கங்காய் அடை ரெடி.
பீர்க்கங்காய் அடை
77
previous post