வடலூர், ஜூன் 4: வடலூர் காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (51), இவர் நேற்று முன்தினம் வடலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நடந்த சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வடலூர் வாகிசம் நகரை சேர்ந்த சக்திவேல் மகன் சுரேந்தர் (18), கலைவாணி பள்ளி தெருவை சேர்ந்த செல்வம் மகன் தனுஷ் (21), மார்க் (எ) மகேஷ் ஆகிய மூன்று இளைஞர்களும் ராஜவேலுவிடம் பீடி கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் பீடி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் ராஜவேலுவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும், கருங்கல்லால் தாக்கியுள்ளனர். அப்போது இதனைக் கண்டு தட்டிக்கேட்ட ராஜேந்திரன் என்பவரையும் மூன்று பேரும் சேர்ந்து தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராஜவேல் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தர், தனுஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மகேஷை தேடி வருகின்றனர்.
பீடி தராத முதியவரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது
0