பந்தலூர், பிப்.19: பந்தலூர் அருகே கூடலூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேரம்பாடி, எருமாடு, தாளூர், நெலாக்கோட்டை, பிதர்காடு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி, பேக்கரிகள், மீன், இறச்சி கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் கேரள மாநில அரசு பஸ்களிலும் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின்பேரில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சலீம்,
வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், நாராயணன், ஊராட்சி செயலாளர்கள் சோனி, செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனையிட்டனர். இதில், தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் கேரளா அரசு பஸ்களில் பிளாஸ்டிக் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.