ராசிபுரம், ஜூன் 5: ராசிபுரம் நகராட்சியில் கமிஷனர் (பொ) பிரேம்ஆனந்த், நகர்மன்ற தலைவர் கவிதாசங்கர் தலைமையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேந்தமங்கலம் அரசு ஐடிஐ சுகாதார ஆய்வாளர், பயிற்சி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணி கச்சேரி தெரு, கடைவீதி, அண்ணா சாலை ஆகிய பகுதிகள் வழியாக சென்றது. நிகழ்வில் நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
0
previous post