தொண்டாமுத்தூர்,ஆக.4:கோவை அருகே ஆலாந்துறை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற முஜூபுன்னிஷாவுக்கு, பிரிவு உபசார விழா பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, அனிதா, விசாலாட்சி, சசிகலா, லட்சுமி காளி, லட்சுமி, அம்பிகா, சாமியப்பன், ஈஸ்வரி, சரிதா, விஜயலட்சுமி, முன்னாள் துணைத் தலைவர் ஏ. கே. ரங்கசாமி, மீனவரணி ராஜேந்திரன், குமார் சண்முகராஜ்,, ஸ்விட்ச் பாபு, கவுன்சிலர் முத்து, இளநிலை உதவியாளர் சரண்யா, வரி வசூலர் நாகராஜ், குடிநீர் வினியோக பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு, நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.