திருச்சி, செப்.6:ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் போராடி, பிரிட்டிஷாரின் துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகளை நினைவு கூறும் தியாகிகள் நினைவேந்தல் கூட்டம் பொன்மலை சங்கத்தடலில் நேற்று நடந்தது. சிபிஎம் கட்சி மாநகர் மாவட்ட குழு, டி.ஆர்.இ.யூ மற்றும் சிஐடியூ சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.
மாநில செயற்கு உறுப்பினர் தர், டி.ஆர்.இ.யூ செயல் தலைவர் ஜானகிராமன், கோட்டத் தலைவர் லெனின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சியினர், சி.ஐ.டி.யு, டி.ஆர்.இ.யூ, பி.எச்.இ.எல், எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தினர் பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.