ஊத்தங்கரை, நவ.14: ஊத்தங்கரை பிராமணர்கள் சங்க கூட்டம், ஆஞ்சநேயர் சுவாமி கோயில் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சுப்பு ஐயர் தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணிய சிவம் குருக்கள், பொருளாளர் மணிகண்ட ஐயங்கார், துணை தலைவர்கள் ரவி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளைஞர் அணி தலைவர் விஷ்ணுபிரியன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஐ ரகோத்தமன், சேஷாத்ரி ராம், எஸ்ஏ சுப்பிரமணியம், குன்னத்தூர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். இதில் மறைந்த நடிகர் டெல்லி கணேசுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் மாதம் கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், ஊத்தங்கரையிலிருந்து திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் ரவி நன்றி கூறினார்.
பிராமணர்கள் சங்க கூட்டம்
0
previous post