காரிமங்கலம், செப்.21: காரிமங்கலத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் ஒருங்கிணைந்த திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்திற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, முன்னாள் எம்பி எம்.ஜி.சேகர், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், அன்பழகன், பஞ்சப்பள்ளி அன்பழகன், பேரூராட்சி சேர்மன் மனோகரன், சூர்யாதனபால், வெங்கடேஸ்வரன், சிவகுரு, ஹரிபிரசாத், வக்கீல் அசோக்குமார், மகேஷ்குமார், கலைச்செல்வன், ராஜகோபால், செல்வராஜ், முத்தமிழ், குமரவேல், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி துவங்கியது
59
previous post