அம்பத்தூர்: பாடி அருகே பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) கருக்கா சுரேஷ்(45). இவரது மனைவி விமலா (38). இவர் பாடி இளங்கோ நகர் பகுதியில் தூய்மை பணியாளர் வேலை செய்து வருகிறார். பிரபல ரவுடியான சுரேஷ் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்.கே.பி நகர் போன்ற காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விமலா இளங்கோ நகரில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விமலாவை பார்க்க வந்த சுரேஷை 3 மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில், தனிப்படை போலீசார் வழக்குபதிந்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (38), மணிவண்ணன் (32), டில்லிராஜ் (31) ஆகியோர் ஒருங்கிணைந்த அம்பத்தூர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை நீதிமன்ற உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைத்தனர்….