Saturday, February 24, 2024
Home » பிரதமர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை திருச்சி வருகை: 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது

பிரதமர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை திருச்சி வருகை: 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது

by Ranjith

 

திருச்சி, டிச. 30: பிரதமர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா ஜனவரி 2 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று புதிய முனையத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி திருச்சி வருகிறார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38 வது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிடோரும் பங்கேற்கின்றனர். திருச்சிக்கு பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் (எஸ்பிஜி) முதல் குழு நேற்று இரவு திருச்சி வந்தது.  இதையடுத்து நேற்று இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது. பிரதமர் வருகையின் போது 5அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவட்ட போலீசார், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும்.

You may also like

Leave a Comment

18 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi