திருப்பூர், அக்.25: திருப்பூர் ஏகேஆர் கார்டனில் (ஷெரீப் காலனி) அமைந்துள்ள பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கொலு வைக்கப்பட்டு கடவுளை சிறப்பிக்கும் வகையில் பூஜைகள் மற்றும் பஜனைகள் தினமும் நடைபெற்றது. மாணவர்களுக்கு, நவராத்திரி தொடர்பான கதைகள் மற்றும் நன்னெறி கதைகள் கூறப்பட்டன.
மாணவர்கள் கடவுள் வேடமணிந்து நடத்திய நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் ஷியாமலா மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.