Tuesday, July 16, 2024
Home » பிரச்னைகளை புரிந்துகொள்வோம்!

பிரச்னைகளை புரிந்துகொள்வோம்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்எலும்பே நலம்தானா?!எலும்பு நலன் காக்க அது தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வரும் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், பல நேரங்களில் சுளுக்கு, சயாட்டிக்கா போன்ற பிரச்னைகள் எலும்பு தொடர்பான பிரச்னையாக புரிந்துகொள்ளப்பட்டு குழப்பம் ஏற்படுத்துகிறது. இது மருத்துவருக்கும், நோயாளிக்கும் தேவையற்ற கால விரயத்தையும், பொருள் இழப்பையும் உண்டாக்குகிறது. எனவே, இதிலிருந்து தெளிவு பெறவே இந்த அத்தியாயம்.எலக்ட்ரோலைட் சமநிலையின்மைதசைகளின் இயக்கத்திற்கு சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுக்கள் தேவை.உடற்பயிற்சி செய்வதன் மூலம் இவற்றில் ஒரு பகுதியை உடல் இழக்கும். அதன் காரணமாக பிடிப்பு ஏற்படுவது, பலவீனமாக உணர்வது, மரத்துப் போவது போன்ற உணர்வுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்வோருக்கும் இந்த பிரச்னை ஏற்படும். உடற்பயிற்சி செய்வோர் மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவோர் எலக்ட்ரோலைட் உள்ள பானங்களை அருந்தலாம். அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை அவசியம்.சயாட்டிகாசயாட்டிகா(Sciatica) நரம்பில் ஏற்படும் உறுத்தல் காரணமாக உருவாகும் வழி இது. இந்த நரம்பை உறுத்தும் எதுவும் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். அடிமுதுகு பகுதியில் உள்ள நரம்பானது அழுத்தப்படுவதே இதற்கு அடிப்படை காரணம். சயாடிகா வலி பல நேரம் சாதாரண முதுகுவலி என்று பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு.சாதாரண தசைபிடிப்பு தொடங்கி உயிரே போகிற வலி வரை இதன் தீவிரம் எப்படியும் இருக்கலாம். நிற்கவோ உட்காரவோ முடியாத நிலையும் ஏற்படலாம். வலி நிவாரண மருந்துகள், வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள், ஒத்தடம் போன்றவை ஆரம்ப கட்டத்தில் பரிந்துரைக்கப்படும். தீவிரமான வலிக்கு காக்னிடிவ் பிஹேவியரல் தெரபி தேவைப்படலாம். மிகவும் தீவிரமான நிலையில் அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும்.Peripheral artery diseasePeripheral artery disease பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களின் மூட்டுகளில் போதுமான ரத்த ஓட்டம் இருக்காது. தமனிகள் சுருங்கும்போது இப்படி நடக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் கால்களில் ஒருவித பலவீனத்தையோ அல்லது மரத்துப்போன உணர்வையோ அல்லது நடக்கும்போதுசிரமத்தையும் உணர்வார்கள்.புகைப்பழக்கம் இருக்கும் சிலருக்கு அந்த பழக்கத்தை கைவிட்டால் இந்த பிரச்னை சரியானதாக தெரிய வந்திருக்கிறது.புகைப்பழக்கம் இருப்பவர்கள் கால்களில் வலியை உணரும்போது முதல் வேலையாக அந்த பழக்கத்தை நிறுத்துவது தற்காலிக தீர்வை தரும். அதையும் தாண்டி வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுகலாம். அவர் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப வலி நிவாரண மருந்துகளை பரிந்துரைப்பார். அரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.Deep vein thrombosisதொடை அல்லது கால்களின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ரத்த கட்டுதான் இது. இந்த பிரச்சனையில் அறிகுறிகள் அவசியம் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் வலியும், வீக்கமும், கால்கள் சிவந்து போவதும் இருக்கும்.எனவே, இந்த அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.Deep vein thrombosis பிரச்சனையை கவனிக்காமல் அலட்சியம் செய்தால் ரத்தக்கட்டு ஆனது உடைந்து நுரையீரலுக்குள் புகுந்து pulmonary embolism என்கிற ஆபத்தான பிரச்னையில் போய் முடியலாம்.அது நுரையீரல் ஆரோக்கியத்தையே பாதிக்கக்கூடிய பயங்கரமான பிரச்னை. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவதன் மூலம் அவர் ரத்தக் கட்டுகள் பெரிதாகாமலும் புதிதாக உருவாகாமலும் ஏற்கனவே உள்ள ரத்தக் கட்டுகள் உடையாமலும் தவிர்க்க மருந்துகளை பரிந்துரைப்பார்.Peripheral neuropathyமூளைக்கு தகவல்களை கடத்தும் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் உருவாகக்கூடிய பிரச்னை இது.நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இது மிகவும் சகஜம். ஆனாலும் மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு அவற்றின் பக்கவிளைவுகளாலும், அடிபடுவதாலும் தொற்றுகளாலும் கூட இந்த பிரச்னை ஏற்படலாம்.இந்த பாதிப்பில் கால்களில் உள்ள நரம்புகளே பெரும்பாலும் பாதிக்கப்படும். அந்த பகுதிகள் குத்துவது போலவும், மரத்துப்போனது போலவும் பலவீனமானது போலவும் உணரப்படும். அறிகுறிகளை வைத்து மருத்துவர் peripheral neuropathy பிரச்னையை உறுதி செய்து அதற்கேற்ப வலியை குறைக்கும் மருந்துகளை பரிந்துரைப்பார்.Spinal Stenosisமுதுகில் உள்ள எலும்புகளின் இடையில் உள்ள இடைவெளியானது குறுகி போவதால் பிரச்னை இது.அதனால் நரம்புகளின் மீது அழுத்தம் கூடி கால்களில் வலி மரத்துப்போன உணர்வு போன்றவை ஏற்படலாம்.உடலின் பேலன்ஸ்சிலும் லேசான பிரச்னையை உணரலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருந்து மாத்திரைகளின் மூலமும் பிஸியோதெரபி மூலமும் இந்த பிரச்சனையை குணப்படுத்தலாம். அரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.ஆர்த்ரைட்டிஸ்மூட்டுகளை பாதிக்கும் பரவலான பிரச்னை இது. கால் மூட்டுகளில் வலி வீக்கம் மற்றும் இறுகிய உணர்வை தரும். இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டுகளை பாதிக்கும்போது நடப்பது உள்ளிட்ட அன்றாட வேலைகளை செய்வது சிரமம் ஆகும். இந்த பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடையாது. எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்புவது, உடற்பயிற்சி செய்வது இரண்டும் உதவும்.தசை இழுப்புதசைகள் அளவுக்கதிகமாக எடுக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னை இது. பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் பிரச்னை இது. வலி மிகக் கடுமையாக இருக்கும். பாதிக்கப்பட்ட இடத்தை தொட்டு பார்த்தால் மிக மென்மையானது போல தெரியும். ஒரு நாளைக்கு பல முறை 20 நிமிடங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியை சற்று குறைக்கும். மற்ற நேரங்களில் கால்களை சற்று உயர்த்தி வைத்த நிலையில் இருக்க வேண்டும்.மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளலாம். சுளுக்கு இரண்டு எலும்புகளை இணைக்கும் பகுதியிலுள்ள தசைநார் இழுக்கபடுவதால் அல்லது கிழி படுவதால் ஏற்படும் பிரச்சனை இது. கணுக்கால் சுளுக்கு மிகவும் சகஜம். பாதிக்கப்பட்ட பகுதி வீங்கி கொள்ளும் வலி எடுக்கும். ஓய்வெடுப்பது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது, பாதிக்கப்பட்ட பகுதியை பேண்டேஜால் கட்டுவது, சற்றே உயர்த்தி வைத்து இருப்பது. ரைஸ் என்கிற (RICE) சிகிச்சை பலன் தரும்.அதாவது Rest, Ice, Compression, Elevation என்பதன் சுருக்கமே RICE. வலியும் வீக்கமும் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம். வேறு ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர் சந்தேகித்தால் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைப்பார்.தசைப்பிடிப்புகணுக்கால் பகுதியில் உள்ள தசையானது திடீரென இறுகிப் போவதால் ஏற்படும் பிரச்னை இது. கடுமையான வலியுடன் அந்த பகுதியில் தசைகள் உருண்டு திரண்ட மாதிரி ஒரு உணர்வு ஏற்படும். வயதானவர்களுக்கு அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படும்.அதிகம் அலைச்சல் கொண்டவர்களுக்கும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் கூட ஏற்படும். இந்த பிரச்னை பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். ஆனாலும் அடிக்கடி தொடரும்போது மருத்துவ ஆலோசனை அவசியம்.Tendinitisதசைகளை எலும்போடு இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் பாதிப்பு இது. இந்த பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அதிகரிக்கும். குறிப்பாக அப்பகுதியை அசைக்கும்போது வலி அதிகரிக்கும். இதுவே Tendinitis. இது இடுப்பு பகுதி, முழங்கால் மற்றும் கணுக்கால் வரை பாதிக்கும். ரைஸ் சிகிச்சை முறை இதற்கும் பலன் தரும். வலியும், வீக்கமும் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அவர் வலியையும், வீக்கத்தையும் குறைக்கும் மருந்துகளை பரிந்துரைப்பார்.வெரிகோஸ் வெயின்ஸ்இதயத்துக்கு ரத்தத்தை திரும்ப எடுத்து செல்வதில் அதிக சிரமப்பட்டு நரம்புகள் இயங்கும்போது அவை வீங்கி முறுக்கி கொள்ளலாம். அடர் நீல நிறத்தில் மாறலாம். இதனால் கால்களில் கனமான உணர்வு தெரியும். எரிச்சலும் தசை பிடிப்பும் சேர்ந்துகொள்ளும். வயதாகும்போது இது அடிக்கடி வரும். கர்ப்பிணி பெண்களுக்கும், அதிக எடை கொண்டவர்களுக்கும், நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வருவது சகஜம்.உடல் எடையை குறைப்பது, உடற்பயிற்சிகள் செய்வது மற்றும் இதற்கான பிரத்யேக ஸ்டாக்கிங் உபயோகிப்பது போன்றவை வலியிலிருந்து நிவாரணம் தரும். இவை பலனளிக்காத பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.எரிச்சலுடன் கூடிய தொடைவலிMeralgia paresthetica என்பது ஒருவகையான நரம்பியல் பிரச்னை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடைகளின் மேல் பகுதியில் எரிச்சல், வலி, மரத்துபோன உணர்வு போன்றவை இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும், உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும், இறுக்கமான உடை அணிபவர்களுக்கும் இந்த பிரச்னை அதிகம் ஏற்படும்.சாதாரண வலி நிவாரண மருந்துகளின் மூலமே இந்த பிரச்சனையை சரியாக்கலாம். ஆனால், வலி 2 மாதங்களுக்கும் மேலாக தொடரும் பட்சத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது.( விசாரிப்போம் !)எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi