ஈரோடு, ஆக. 22: ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள மேட்டுப்புதூர், கிணிப்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்-சாந்தாமணி மகள் பார்கவி (21). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (25). அந்தியூர், கீழ்வாணி இந்திரா நகரில் வசித்து வந்தனர். பார்கவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை பெற்றோர் பிரசவத்துக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில் குடும்ப செலவுக்கு கடன் வாங்கியுள்ளதாக பெற்றோர் கூறினர்.
இதனை கேட்ட மகள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து பார்கவியை காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து பெருந்துறை போலீசார் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்கவியை தேடி வருகிறார்கள்.