கிருஷ்ணகிரி, ஜூன் 17: கிருஷ்ணகிரி அருகே, சோமார்பேட்டை குல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மினிமோல். இவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். வீரப்பன் நகரைச் சேர்ந்த ராஜ்(36) என்பவரிடம், மினிமோல் சீட்டு போட்டிருந்தார். ஆனால், அவர் கட்டிய 12லட்சம் ரூபாயை கொடுக்காமல் ராஜ் காலம் கடத்தி வந்துள்ளார். மினிமோல் பலமுறை பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை. மேலும், அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், ராஜ் நிற்பதாக மினிமோலுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மினிமோல், பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் இருந்த ராஜ், மினிமோலை கீழே தள்ளி விட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பியூட்டீசியனை சரமாரி தாக்கிய வாலிபர் கைது
0
previous post