பந்தலூர்,ஆக.23: பந்தலூர் அருகே பிதர்காடு பஜாரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்,தோட்டத் தொழிலாளர்கள்,ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் இவ்வங்கியில் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கடந்த சில நாட்களாக இயங்காமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த ஏடிஎம் இயந்திரதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியின் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.