நன்றி குங்குமம் டாக்டர்அறிந்துகொள்வோம்உருவ அமைப்பில் சின்னதாக இருந்தாலும், பயனுள்ள நல்ல செயல்களைச் செய்பவர்களைப் புகழத்தான் கீர்த்தி பெரிது என்பார்கள். இது பிட்யூட்டரி சுரப்பிக்கு 100 சதவீதம் பொருத்தமான பாராட்டு. ஏனெனில், அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் இதன் செயல்பாடுகள் மிகப் பெரியவை மற்றும் முக்கியமானவை.* நமது மூளையின் கீழ்ப்பகுதியில் காணப்படுகிற ஹைப்போதலாமஸ் என்ற உறுப்புக்குக் கீழே பிட்யூட்டரி சுரப்பி(Pituitary Gland) காணப்படுகிறது. ஒரு பட்டாணியின் அளவு கொண்ட இந்த சுரப்பி 0.5 கிராம் எடை உடையது.* மிகச் சிறிய உறுப்பாக பிட்யூட்டரி இருந்தாலும் உட்புற பிட்யூட்டரி, வெளிப்புற பிட்யூட்டரி என இரண்டு பிரிவுகளாக மருத்துவ நிபுணர்களால் வகைப்படுத்தப்படுகிறது.*உலகில் காணப்படுகிற அனைத்துவிதமான முதுகெலும்பு கொண்ட உயிரினங்களிலும் பிட்யூட்டரி சுரப்பி உள்ளது. அதேவேளையில் அதனுடைய தோற்ற அமைப்பு பல்வேறு வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. * பிட்யூட்டரி சுரப்பியின் எல்லா வகையான செயல்பாடுகளும், மைய நரம்பு மண்டலம் முலமாக ஹைப்போதலாமசுடன் இணைக்கப்படுகிறது.*மனித உடலில் பலவிதமான செயல்பாடுகளை இந்த சுரப்பி மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், உணவைச் சக்தியாக மாற்றுதல், உடலில் சவ்வூடு பரவலை முறைப்படுத்துதல், சிறுநீரகங்கள் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்துதல், உடலின் தட்பவெப்ப நிலையைச் சீராக வைத்திருத்தல் போன்றவற்றை பிட்யூட்டரி செய்து வருகிறது.*Anterior pituitary என்பது பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியாக திகழ்கிறது. Posterior pituitary இதனுடைய பின்பகுதியாக அமைந்துள்ளது. இதனுடைய முதற்பகுதியில் சுரக்கும் ஹார்மோன் Trophic Hormone; என குறிப்பிடப்படுகிறது.* பிட்யூட்டரி சுரப்பி உடலின் சமநிலையை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கும் தன்மை உடையது. இவற்றில், மற்ற நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டுகிற ட்ரோபிக் ஹார்மோனும் உள்ளடங்கும்.* பிட்யூட்டரி எந்தவித குறைபாடும் இல்லாமல் செயல்படுவதற்கு புரோட்டீன், வைட்டமின் ஏ, இ மற்றும் டி போன்றவை உதவியாக இருந்து வருகின்றன.* நமது உடலில் காணப்படுகிற அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தவும், அவை எந்தவிதமான குறைபாடு இல்லாமல் செயல்பட்டு வரவும் பிட்யூட்டரி மிகவும் துணைபுரிகிறது.* கப சுரப்பி, முதன்மை நாளமில்லா சுரப்பி வேறு பெயர்களாலும் பிட்யூட்டரி அழைக்கப்படுகிறது. ;* பிட்யூட்டரி நன்றாக இயங்க பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், அன்னாசி, பப்பாளி, கொய்யா, நிலக்கடலை, கோதுமை போன்ற உணவுப்பொருட்கள் உதவுகின்றன.* பிட்யூட்டரியில் இருந்து உற்பத்தியாகும் Luteinising hormone, மற்றொரு ஹார்மோனான Follicle stimulating hormone உடன் ஒன்றாக சேர்ந்து நமது இனப்பெருக்க மண்டலங்கள் வளர்ச்சி பெற உதவுகிறது.* பிட்யூட்டரி சுரப்பி சரியான அளவில் வளரவில்லை என்றாலோ, மூளைப்பகுதியில் தொற்று காரணமாக, கட்டிகள் ஏதேனும் வந்தாலோ, அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சையால் இச்சுரப்பி பாதிக்கப்பட்டு இருந்தாலோ பிட்யூட்ரிசம் என்ற குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. * போஸ்டீரியர் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும் வாசோபிரஸின் ஹார்மோன் போதிய அளவு சுரக்காத பட்சத்தில், சிறுநீர் அளவுக்கு அதிகமாக நமது உடலில் இருந்து வெளியேறும். இந்த பாதிப்பைச் சரிசெய்ய, வாசோபிரஸின் ஹார்மோனை ஊசி மூலமாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ மருத்துவர் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்ளலாம்.* பிட்யூட்டரி சுரப்பியில் எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும், அப்பாதிப்பு நமது உடலில் காணப்படுகிற மற்ற நாளமில்லா சுரப்பிகளையும் பாதிப்பு அடைய செய்யும். எனவே, இந்த சுரப்பியில் சிறிய அளவிலான பிரச்னை இருப்பது தெரிய வந்தாலும், உடனடியாக நாளமில்லா சுரப்பி மருத்துவ நிபுணரை அணுகி தகுந்த ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெறுவது பாதுகாப்பானது.*ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்கள், தினமும் சாப்பிடுவதற்கு முன்னர் ஐந்து துளசி இலைகளைச் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதால் நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்பட்டு ஹார்மோன் செயல்பாடு சீராகும் என்கிறார்கள் மருத்துவர்கள். * பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து உற்பத்தியாகிற ஹார்மோன்கள் சரியான விகிதத்தில் சுரந்திட உணவு கட்டுப்பாடு மிகமிக அவசியம் ஆகும். எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. * கெட்ட கொழுப்பினை அதிகளவில் உள்ளடக்கிய நொறுக்குத்தீனிகளான மிக்சர், க்ரீம் பிஸ்கட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பு வகைகளான அவகேடா, தேங்காய் எண்ணெய், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.தொகுப்பு : விஜயகுமார்
பிட்யூட்டரி புராணம்
74
previous post