Saturday, April 13, 2024
Home » பிடிபட்ட பைக் திருடன் சிறையில் அடைப்பு

பிடிபட்ட பைக் திருடன் சிறையில் அடைப்பு

by Ranjith

 

புதுச்சேரி, மார்ச் 11: புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் பெரியமுதலியார்சாவடி திவான் கந்தப்பா நகரை சேர்ந்தவர் ஹரிகரன் (25). இவர், ஆரோவில்லில் பணிமனை வைத்து வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், புதுவை சுப்பையா சாலை இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம் அருகே தனது பைக்கை விட்டு பூட்டிவிட்டு, கடைக்கு சென்றார். மதியம் 12 மணியளவில் திரும்பி வந்தபோது அவரது பைக் மீது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் அமர்ந்து கொண்டு நெக் பூட்டை உடைத்து வயர்களை அறுத்து விட்டு வண்டியை திருட முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த ஹரிகரன் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லூர் எடையார் பகுதியை சேர்ந்த மணி (எ) வீரமணி (19) என்பது தெரியவந்தது. இவர் மீது திருவெண்ணைநல்லூரில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

nine − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi