விருதுநகர், அக்.6: விருதுநகரில் பிஎஸ்என்எல் நிறுவன தின ஓவியப்போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா பிஎஸ்என்எல் நிலைய கூட்ட அரங்கில் துணைப் பொதுமேலாளர் பிரேம்சஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஓவிய போட்டியில் முதல்பரிசு அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளி மாணவி தீபாவிற்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஒரு வருட பாரத் பைர் இணைப்பு வழங்கப்பட்டது. 2ம் பரிசு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி ஜெயபாரதிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 6 மாத பைபர் இணைப்பு வழங்கப்பட்டது.
3ம் பரிசு அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீக்கு ரூ.3,500 மதிப்பிலான 3 மாத பாரத் பைர் இணையதள இணைப்பு பரிசாக வழங்கப்பட்டது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 13 மாணவ, மாணவியருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. பிஎஸ்என்எல் பாரத் பைபர் புதிய இணைப்பினை பெறுவதற்கு 8300035678 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்யலாம். பிஎஸ்என்எல் நிறுவன சேவைகள் மற்றும் கட்டணத்திட்டம் குறித்த விபரங்களை www.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என துணை பொதுமேலாளர் பிரேம்சஜ் தெரிவித்துள்ளார்.