வேலூர், ஆக.30: வேலூர், திருப்பத்தூர் வட்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என பொதுமேலாளர் குமார் தெரிவித்தார். தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தில் வேலூர் வர்த்தக பகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் வட்ட பகுதிகளில் சிம்கார்டுகள், ரீசார்ச் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வரும் 12ம் தேதி வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என வேலூர் முதன்மை பொதுமேலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.