மதுரை, ஜூலை 21: தேசிய கோரிக்கை தினம் கடைப்பிடிக்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தல்லாகுளம் பிஎஸ்என்எல் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐபிடிபிஏ மாவட்ட தலைவர் உத்தரகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரிச்சர்ட் சித்திர மணி, செல்வின் சத்தியராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. தற்காலிக ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமலாக்க வேண்டும். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியமும், பயன்களும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இறுதியாக டிஎன்டிசிடபுள்யு நிர்வாகி சாமிநாதன் நன்றி கூறினார்.