அரியலூர், ஆக 26:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பசும்பால் லிட்டருக்கு ரூ.45 ஆக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பாலை கொட்டி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் 50 சதவீதம் மானியத்தில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். செந்துறை, சோழன்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, கல்லக்குடி, பொய்யூர், மறவனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.