காரமடை, மே 30: காரமடை அருகே உள்ள குருந்தமலையில் பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் ஜூன் 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காரமடையில் முருக பக்தர்கள் குழு சார்பில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்று குழந்தை வேலாயுத சுவாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.